யூனியன் மகளிருக்கு மகளிர் தின விழா வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது. யூனியன் தலைவர் திருமதி.ஆர். சந்திரிகா தலைமையில் வெகுவிமர்சையாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நமது யூனியன் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
யூனியன் பொதுச் செயலாளர் மாரியப்பன் , முதன்மைச் செயலாளர் வஜ்ரவேல் , மாநில துணை தலைவர்கள் விமல் சந்த், கதிரவன் சென்னை மாவட்ட தலைவர் கதிர்மணி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வில் மகளிர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் நமது மகளிர் உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நமது யூனியனின் மகளிர் உறுப்பினர்களுக்கு ஹேண்ட்பேக் உள்ளிட்ட பரிசு பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது. மகளிர் தின விழா கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது என்பதை உங்களுடன் அன்புடன் பகிர்ந்து கொள்கிறோம்.