கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (சிஎஸ்கே) என்ற பெயரில் ஒரு புத்தம்புதிய சிறப்பு நிகழ்ச்சியை தொடங்குவதன் மூலம் தனது பார்வையாளர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சத்தின் அளவை இன்னும் உயர்த்த இம்மாநிலத்தின் மிக இளமையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், தயாராக இருக்கிறது. குடும்பத்தினரோடு இணைந்து, கவலைகள் இன்றி கலகலப்பாக பொழுதுபோக்க மிகப்பொருத்தமான தீர்வை பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியானது, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும். கலர்ஸ் தமிழின் நிகழ்ச்சிகள் மற்றும், நெடுந்தொடர்களில் நடிக்கும் நட்சத்திரங்களின் குழுக்கள், தொடர்ந்து நடைபெறுகின்ற ஆர்வமூட்டும் சுற்றுகளில் களத்தில் மோதவிருக்கின்றனர். 2021 பிப்ரவரி 28, ஞாயிறன்று ஆரம்பமாகும் இந்த சிறப்பு நிகழ்ச்சியானது, பொழுதுபோக்கு அம்சங்களோடு ஒரு புத்துயிரூட்டும் புதுமையான நிகழ்ச்சியாக நிச்சயம் இருக்கும்.
விஜே. அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி ஆகியோரால் சுவைபட தொகுத்து வழங்கப்படும் சிஎஸ்கே நிகழ்ச்சியில், கலர்ஸ் தமிழின் புதின நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நட்சத்திரங்களின் குழுக்களுக்கிடையே நட்புறவான மோதலையும், தோழமையான போட்டியையும் காணலாம். பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் இந்நிகழ்வில் இதுவரை வெளிப்படாத தங்களது திறமைகளை பலரும் அறியுமாறு காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளத்தையும் இந்நிகழ்ச்சி வழங்கும். பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கையில் எந்த சமரசமும் செய்துகொள்ளாத சிஎஸ்கே நிகழ்ச்சியானது, நடனம், இசை ஆகியவற்றோடு குதூகலமும், கேளிக்கையும் நிறைந்த செயல்நடவடிக்கைகளையும் கொண்டிருக்கும். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக,2021 பிப்ரவரி 28 அன்று ஒளிபரப்பாகின்ற முதல் எபிசோடில், இதயத்தை திருடாதே மற்றும் உயிரே ஆகிய நெடுந்தொடர்களின் ஒட்டுமொத்த குழுவினரும் பங்கேற்று, ஒவ்வொரு குழுவிற்கும் எதிராக மோதவிருக்கின்றனர்.
இந்த புதிய நிகழ்ச்சியின் தொடக்கம் குறித்து கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனுப் சந்திரசேகரன் பேசுகையில், “மிக அழகாக உருவாக்கப்பட்ட கதைகளும் மற்றும் அதன் ஒளிபரப்பிற்கான உள்ளடக்கம் பார்வையாளர்களை அதனோடு இன்னும் அதிக அளவில் ஒன்றிப்போகுமாறு செய்வதற்கு எமது நெடுந்தொடர் நிகழ்ச்சிகளின் நட்சத்திரங்களே காரணமாக இருக்கின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உயிரோட்டமுள்ளதாக செய்வதற்கு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த நட்சத்திரங்களது சின்னத்திரை மற்றும் நிஜவாழ்க்கைத் திறன்களை அங்கீகரிக்கின்ற ஒரு பொருத்தமான கொண்டாட்டமான சிஎஸ்கே நிகழ்ச்சி இருக்கும். ஒரு தளத்தில் எமது நட்சத்திரங்களை ஒன்றாக அழைத்து வந்து, அதிக குதூகலத்துடனும், ஆரவாரத்துடனும் இதுவரை வெளியில் தெரியாமல் மறைந்திருந்த அவர்களது திறமைகளை இந்நிகழ்ச்சியின் மூலம் கொண்டாடுவது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது. இலட்சக்கணக்கான குடும்பங்களில் அனைவரும் ரசித்து கொண்டாடி மகிழ்கின்ற மிகப்பெரிய வெற்றி நிகழ்வாக சிஎஸ்கே இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.