
சர்வதேச திரைப்பட விழாக்களில் வெற்றிப்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் சத்யம் திரையரங்கின் பல திரைகளில் ஒருசேர திரையிடப்பட்டு பார்வையாளர்களின் இரசனைக்கு விருந்தாக அமைந்தது. திரைப்படவிழாவின் இரண்டாவது நாளான இன்று CIFF உடன் ஒருங்கிணைந்து செயல்படும் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் (மாஸ்டர் கிளாஸ்) முக்கிய ஆளுமைகளுடனான கலந்துரையாடல் வகுப்புகள் நடைப்பெற்றது.. அதன் தொடக்கவிழாவில் இசையமைப்பாளரும் பாடகருமான கலைமாமணி இமான் அவர்களுடன் சுவாரஸ்யமான உரையாடல் நடைப்பெற்றது…இரண்டாவது நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் பங்குகொண்டு சிறந்த எழுத்து, இயக்கம் குறித்த விரிவான விளக்க உரை வழங்கினார்.படிக்க வேண்டிய சிறந்த புத்தகங்கள், பார்க்க வேண்டிய முக்கிய படங்கள் குறித்த தெளிவான விளக்கங்களைத் தந்ததோடு அதன் பட்டியலையும் பகிர்ந்துக்கொண்டார்.