Breaking News
Home / cinema / Movie Review / பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்- Open Review

பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்- Open Review

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ஏ1 படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் சில காமெடி காட்சிகள் தான் கை கொடுத்தன. கதை சொல்லிய விதம், ஹீரோ-ஹீரோயின் பிரச்சனை, துணை கதாபாத்திரங்கள், குடும்பத்தில் நடக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள் என்று ஏ1 பாணியை தான் பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் ஜான்சன்.

படத்தில் நிறைய காமெடி காட்சிகளை வைத்திருக்கிறார் ஜான்சன். அதில் சில ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது, சில கை கொடுக்கவில்லை.

கானா பாடகரான ஜெயராஜ்(சந்தானம்) காதல் முறிவுக்கு பிறகு மது அருந்தத் துவங்குகிறார். இந்நிலையில் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் திவ்யாவை(அனைகா சோதி) பார்க்கும் ஜெயராஜுக்கு காதல் ஏற்படுகிறது. காதல் தோல்வியால் கவலையில் இருக்கும் திவ்யாவுக்கும் ஜெயராஜை பிடித்துவிடுகிறது. ஆனால் தங்களின் அப்பாக்களால் காதலில் பிரச்சனை ஏற்படும் என்பது அவர்களுக்கு தெரியாது.

ஜெயராஜின் தந்தை பிரகாஷ் ராஜ்(ப்ருத்வி ராஜ்) மற்றும் திவ்யாவின் குடும்பத்தார் அவர்களை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையே திவ்யாவின் முன்னாள் காதலர் வேறு திரும்பி வந்து மன்னிப்பு கேட்கிறார். ஜெயராஜும், திவ்யாவும் சேர்வார்களா?

இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் தான் படத்திற்கு பக்கபலம். சந்தானம் ஃபுல் ஃபார்மில் இருந்தாலும் முதல் பாதியில் காமெடி காட்சிகளை பார்த்து சிரிப்பு வரவில்லை. ப்ருத்வி ராஜின் கதாபாத்திரத்தை உருவாக்கிய விதம் அருமை. ஹீரோ, ஹீரோயின் வரும் காதல் டிராக் பழசு தான். மொட்டை ராஜேந்திரன், டைகர் தங்கதுரை வரும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.

பல காட்சிகளில் ஒன்லைனர்கள் அதிகமாக இருந்தாலும், சில காட்சிகளில் திணிக்கப்பட்டுள்ளது. கதை பழசு தான் என்றாலும் சந்தானம், ப்ருத்வி ராஜ் மற்றும் சில கதாபாத்திரங்களால் பார்க்கும்படியாக இருக்கிறது.

சந்தோஷ் நாராயணனின் இசை ஆறுதல். பாரிஸ் ஜெயராஜ், கொஞ்சம் கஷ்டப்பட்டு சிரிக்க வைக்கிறார்.

OPEN RATING : 3/5

About Publisher

Check Also

Farhana Movie Review

Actress Aishwarya Rajesh is back with another female-centric film, titled Farhana. Directed by Nelson Venkatesan, …