Home / cinema / Cinema News / MGR’s 104th Birth Anniversary

MGR’s 104th Birth Anniversary

எம் ஜி ஆர் அவர்களின் 104 வது பிறந்த நாளையொட்டி “தலைவி” படக்குழுவினர் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வாழ்வின் பெரும் தூணாக விளங்கிய, வரலாற்று நாயகனை போற்றும் பொருட்டு, கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில், “தலைவி” படத்தின் சிறு துணுக்கை வெளியிட்டு கௌரவுத்துள்ளது.

கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “தலைவி” இவ்வாண்டின் மிக முக்கியமான ஒரு திரைப்படமாக விளங்குகிறது.

புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 104 பிறந்த நாளை முன்னிட்டு அந்த வரலாற்று நாயகனுக்கு “தலைவி” படக்குழுவினர் சிறப்பு செய்துள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர். மேலும் தலைவி ஜெயலலிதா அவர்களின் வாழ்விலும் வளர்ச்சியிலும் மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்தவர். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ எம் ஜி ஆர் அவர்களின் வாழ்வின் மிக முக்கிய தருணங்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முனேற்றத்திற்கும் அவர் செய்திருக்கும் பெரும்பங்கினை எடுத்துக்காட்டுவதாக அழகாக அமைந்திருக்கிறது.

படக்குழுவினர் முதல் முறையாக கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி ஆகிய இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை, புதிய தோற்றத்துடன் வெளியிட்டுள்ளனர். விஷுவல்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா இருவரும் திரையுலகில் சூப்பர்ஸ்டார்களாக, ரசிகர்களின் விருப்ப நாயகர்களாக, கோலோச்சிய காலத்தை மீண்டும் மீளுருவாக்கம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி இருவரின் கெமிஸ்ட்ரியும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவதாக உள்ளது.

“தலைவி” பன்மொழிகளில் உருவாகும் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தினை இயக்குநர் விஜய் இயக்குகிறார். விஷ்ணு வர்தன் இந்தூரி, சய்லேஷ் R சிங் Vibri Media நிறுவனம் மற்றும் Karma Media நிறுவனம் சார்பில் Gothic Entertainment மற்றும் Sprint Films உடன் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் கதையை விஜயேந்திர பிரசாத் எழுத, கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, சமுத்திரகனி,நாசர் நடித்துள்ளனர். கிரியேட்டிவ் புரடியூசர் பிருந்தா பிரசாத், இணை தயாரிப்பு ஹிதேஷ் தக்கர், திருமால் ரெட்டி.

About Publisher

Check Also

Bigg Boss Sesson 5 அக்சரா ரெட்டி எனும் ஸ்ரவ்யா சுதாகரால்

நடிகர் மற்றும் அரசியல்வாதி திரு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 இந்த சீசன் போட்டியாளரான அக்சரா ரெட்டி …