Home / Commercial / இந்த புத்தாண்டுக்காக ‘பஜன் சாம்ராட்’ என்ற பெயரில் பக்தி சார்ந்த ரியாலிட்டிநிகழ்ச்சியை தொடங்கும் கலர்ஸ் தமிழ்

இந்த புத்தாண்டுக்காக ‘பஜன் சாம்ராட்’ என்ற பெயரில் பக்தி சார்ந்த ரியாலிட்டிநிகழ்ச்சியை தொடங்கும் கலர்ஸ் தமிழ்

பஜன் சாம்ராட் என்ற பெயரில் இவ்வகையினத்தில் முதன் முறையாக பக்தி சார்ந்த ஒரு ரியால்டி நிகழ்ச்சியை மிக இளமையான புது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் விரைவில் தொடங்கவிருக்கிறது. தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பஜன் பாடகர்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தினை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். மனதிற்கு அமைதி தரும் பாடல்கள் மற்றும் பஜனை சங்கீர்த்தனைகளை பார்வையாளர்களுக்கு வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், பஜனை பாடல்களின் வேறுபட்ட வெவ்வேறு வகையினங்களை விளக்கமாக எடுத்துக்கூறி பக்தர்களுக்கு இவை பற்றிய தெளிவையும் இந்நிகழ்ச்சி வழங்கும். 2021 ஜனவரி 10ம் தேதியன்று இந்நிகழ்ச்சி முதன்முறையாக ஒளிபரப்பாகும். ஒவ்வொரு நாள் காலைப் பொழுதையும் தெய்வீக பாடல்களோடு உங்கள் மனதில் ஒளியேற்ற வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு இந்த ரியால்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

கோவிட்-19க்கான பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி பஜன் சாம்ராட் நிகழ்ச்சிக்கான மாநில அளவிலான திறன் தேர்வுகள் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டன மற்றும் 24 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த போட்டியாளர்களை இந்த குழுக்கள் கொண்டிருக்கும். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு குழுவும் அதற்கென ஒரு உத்வேகமளிக்கும் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் கொண்டிருக்கிறது. தெள்ளத்தெளிவாகவும், உற்சாகத்தோடும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் என அறியப்படும் விஜே பிரியதர்ஷினி, தொகுப்பாளினியாக இடம்பெறும் இந்நிகழ்ச்சி ஒன்பது வாரங்கள் ஒளிபரப்பாகிறது. பஜனை பாடல்களின் பல்வேறு வடிவங்களை இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பக்தி பரவசத்தோடு நேர்த்தியாக வெளிப்படுத்துவதை பார்வையாளர்கள் கண்டு மகிழ்வது நிச்சயம். இப்போட்டி நிகழ்வில் வெற்றிபெறும் முதல் மூன்று குழுக்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.  கர்நாடக இசை உலகத்தின் இரு பிரபல ஆளுமைகளான டாக்டர். ஆர் கணேஷ் மற்றும் மஹதி இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக செயல்படுவார்கள். பிரபலமான இந்த நடுவர்களுக்கும் கூடுதலாக வாரம் முழுவதும் எண்ணற்ற பிரபல ஆளுமைகள் விருந்தினர்களாக இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன் இப்புதிய நிகழ்ச்சி பற்றி பேசுகையில், “பஜன் சாம்ராட் என்ற ஒரு தனித்துவமான, பக்தி சார்ந்த ரியால்டி நிகழ்ச்சியை தொடங்குவது எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது. அதன் செயல்நோக்க கோட்பாட்டை தொடர்ந்து பின்பற்றும் வகையில் தமிழ்நாட்டின் கலாச்சார மதிப்பீடுகளை செழுமையாக்குகிற மற்றும் பார்வையாளர்களுக்கு அவற்றை நேர்த்தியாக வழங்குகிற நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழ் தொடர்ந்து தயாரிக்கும். பார்வையாளர்கள் மத்தியில் ஆன்மிக உணர்வை பதிய வைப்பதன் மூலம் இந்நிகழ்ச்சியானது புத்தாண்டின் மிகச்சிறப்பான தொடக்கமாக அமையும்,” என்று குறிப்பிட்டார்.

டாக்டர் ஆர் கணேஷ் இது குறித்து பேசுகையில், “கர்நாடக இசைக்கலைஞராகவும் மற்றும் பஜன் பாடகராகவும் இருக்கும் நான், பஜன்களிலிருந்து தான் கர்நாடக சங்கீதம் உருவானது என்றும் கர்நாடக சங்கீதத்திலிருந்து மெல்லிசை உருவானது என்றும் நம்புகிறேன். மிகச்சிறந்த கர்நாடக இசை விற்பன்னராக தியாகராஜர் சுவாமிகள், பஜன்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக திகழ்கிறார். பக்திசார்ந்த நிகழ்ச்சிகளை மறுபொருள்வரையறை செய்யவிருக்கும் அற்புதமான நிகழ்ச்சியான பஜன் சாம்ராட்-ன் ஒரு அங்கமாக இதில் இடம்பெறுவது மிகப்பெரிய ஆனந்தத்தை எனக்கு தருகிறது. இந்நிகழ்ச்சியின் ஒரு நடுவராக இம்மாநிலத்தில் இருக்கிற சில அற்புதமான திறமைசாளிகளின் பக்திசார்ந்த இசை திறன்களை நேரில் கேட்பதை நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்,” என்றார்.

இந்நிகழ்ச்சியோடு இணைந்திருக்கும் மஹதி இது தொடர்பாக பேசுகையில், “கலர்ஸ் தமிழ் அலைவரிசையோடு இணைந்திருப்பதும் மற்றும் பஜன் சாம்ராட் என்ற தனித்துவமான, பக்திசார்ந்த ரியால்டி நிகழ்ச்சியின் இதன் பார்வையாளர்களுக்கு வழங்குவதும் உண்மையிலேயே பெருமகிழ்ச்சி தருகிறது. தமிழ்நாட்டில் மிக நேர்த்தியாக பஜனை பாடல்களை பாடும் திறமைசாளிகளை கண்டறிவதற்கும் மற்றும் இசை உலகில் பலரும் அறியுமாறு அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும். பார்வையாளர்களோடு இணைந்து இந்த ஆன்மிக பயணத்தில் பயணிப்பதை நான் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் எதிர்நோக்குகிறேன்,” என்று குறிப்பிட்டார். 

கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஜனவரி 10ம் தேதி முதல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் பஜன் சாம்ராட் ரியால்டி நிகழ்ச்சியிலிருந்து உத்வேகத்தையும், பக்தியையும் ஒன்றுசேர பெற்றிட மறக்காதீர்கள்.

கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO553). 

About Publisher

Check Also

The Diwali Edit Play Date Party by The Activity Room and Synck for tiny tots on October 20th at Synck

Chennai October 20th 2021: The Activity Room, a Chennai-based fun space for children to learn, …