Home / cinema / Cinema News / ஆற்றல் படத்தில் நடிகர் விதார்த்தோடு நடிக்கும் கார்

ஆற்றல் படத்தில் நடிகர் விதார்த்தோடு நடிக்கும் கார்

செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ஆற்றல் . சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது .

இந்தப்படத்தில் விதார்த்தோடு இணைந்து ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம்.

ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும் , டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும் என்பதை இந்தப்படம் பேசுகிறது .

படம் முழுக்கஒரு காரை ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து அதை ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம் , படம் பார்ப்பவர்களுக்கு இது புதுமையாக இருக்கும் ,ஒரு கார் எப்படி நடித்திருக்கமுடியும் என்பவர்களுக்கு படம் பார்க்கும்பொழுதுதான் தெரியும் என்கிறார் இயக்குனர் கே எல் கண்ணன்.

படத்தில் வில்லனாக வம்சி கிருஷ்ணா , கதாநாயகியாக ஸ்ரிதா , மற்றும் சார்லி முக்கிய கதாபாத்திரத்திலும் , வையாபுரி, விக்கி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் .

ஒளிப்பதிவு – கொளஞ்சி குமார் .
இசை – அஸ்வின் ஹேமந்த்

எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி

பாடல்கள் – விவேகா

கலை – வீரசமர்

Pro . Guna.

About Publisher

Check Also

TREND LOUD INDIA DIGITAL AND OPEN WINDOW

Chennai, January 2022: Trend Loud India Digital and Director/Producer Balaji Mohan’sOpen Window are proud to …