Home / cinema / Interview / Abarnathi First Open Interview

Abarnathi First Open Interview

நான் அபர்ணதி. எனது நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ தேன்’ திரைப்படத்திற்குத் தாங்கள் அனைவரும் அளித்துவரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தேன்’ திரைப்படம் குறித்து தங்களின் நேர்மறை விமர்சனங்களும், செய்திகளும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், ‘தேன்’ திரைப்படம் 51-வது பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் (2020) திரையிடப்படுவதற்காகத் தேர்வாகியுள்ளது.
இதற்காக, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் விநாயக், ஏபி புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் அம்பலவானன்.பி, பிரேமா.பி மற்றும் ஹீரோ தருண் குமார், குழந்தை நட்சத்திரம் அனுஸ்ரீ, துணை நடிகர்கள் பவா லக்‌ஷ்மணா, அருள் தாஸ், கயல் தேவராஜ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், வசனகர்த்தா ராசி தங்கதுரை, கலை இயக்குநர் மாயபாண்டி ஆகியோருக்கும் நன்றி கூறுகிறேன். படத்தை உருவாக்குவதில் அவர்களின் சிறந்த பங்களிப்பையும், ஆதரவையும் நினைவு கூர்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பால் தான் ‘தேன்’ இன்று தித்திக்கிறது.
தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தரான ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் சாருக்கு தனிச்சிறப்பான நன்றிகள். அவர் படத்தை வெளியிட்டு உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார்.
இதேபோல், வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் எனது அடுத்தத்தத் திரைப்படமான ‘ஜெயில்’ படத்திற்கும் தங்களின் ஒத்துழைப்பு தொடர வேண்டுகிறேன்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கால நல்வாழ்த்துகள்

About Publisher

Check Also

CM-ஐ பார்த்த விஜய் சார்-க்கு தான்!! Makkal Selvan Vijay Sethupathi Emotional Interview

ஜனவரி 29 அன்று ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது …