வாரந்தோறும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் மிகுந்த உற்சாகத்தை அளித்து வருகிறது. இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியில் சர்க்கரை மற்றும் மசாலாக்களுடன் முக்கிய பிரபலங்கள் பங்கேற்பும் கலந்திருக்கிறது. இந்த வார பிரபலங்களான சுஜு வாசன் மற்றும் லட்டு கிருத்திகா ஆகியோர் தங்களின் சமையல் திறன்களை வெளிப்படுத்த உள்ளனர்.
இந்த பிரபலங்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நாவில் நீர் ஊறும் சுவையான உணவை சமைக்க உள்ளனர். இவர்களுடன் இணைந்து சமையல் கலை நிபுணர்கள் செப் தாமு மற்றும் செப் ஸ்ரேயா அட்கா ஆகியோரும் ருசியான சிறந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளை செய்து காண்பிக்கவிருக்கிறார்கள். மேலும் அவர்கள் தயாரிக்கும் பிரபலான உணவுகளில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விவரிக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி வரும் 19 மற்றும் 20-ந்தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு பிடிக்க 3 காரணங்கள் வருமாறு:-
சென்னை முதல் சீனா வரை : இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வரும் ‘தாமு தர்பாரில்’ இந்த வாரம் செப் தாமு நாவில் நீர் ஊறும் 2 விதமான உணவுகளை சமைத்துக் காட்ட உள்ளார். அது காய்கறி நூடுல்ஸ் சூப் மற்றும் முட்டை வடை ஆகியவை ஆகும். நீங்கள் சமைக்கும் உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கும் விதமாக இந்த பகுதியில் செப் தாமு ஒவ்வொரு உணவையும் வாசமாகவும் சுவையாகவும் சமைப்பது எப்படி என்பது குறித்த சுவாரஸ்யமான சமையல் நுணுக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.
மசாலா : இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியான விஐபி வீட்டு சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களான சுஜு வாசன் மற்றும் லட்டு கிருத்திகா ஆகியோர் நமது பாரம்பரியமிக்க மசாலாக்களை பயன்படுத்தி சுவையான உணவுகளை தயாரிக்க உள்ளனர். அசால்ட் சப்பாத்தி ரோல் செய்வது குறித்து சுஜு வாசனும், ஆச்சாரி பன்னீர் டிக்கா செய்வது குறித்து லட்டு கிருத்திகாவும் மிகவும் எளிமையாக சமைத்துக் காட்ட உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ‘கில்லாடி குக்’ பிரிவின் ஒரு பகுதியாக தங்கள் உணவு வகைகளுடன் வேடிக்கை நிறைந்த சமையலில் பிரபலங்கள் ஈடுபடுவார்கள். மேலும் இவர்களுடன் சேர்ந்து சமையல்கலை வல்லுனர்கள், பீட்ரூட் பேரிச்சம்பழம் லட்டு மற்றும் கிறிஸ்துமஸ் சோமாஸ் ஆகிய 2 வகையான உணவுகளை தயாரித்து காண்பிக்க உள்ளனர்.
மிருதுவான மற்றும் மொறுமொறுப்பான உணவு : ஊட்டச்சத்து நிறைந்த உணவை சமைப்பதில் மிகவும் புகழ் பெற்ற செப் ஸ்ரேயா அட்கா இந்த வார இறுதியில் உங்களுக்காக, சுடச்சுட சமையல் பகுதியில் உங்களின் புரதச்சத்து அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மொறு மொறு வெண்டைக்காய் மற்றும் ருசியான வெண்ணெய் முட்டை ரோல் ஆகிய உணவுகளை சமைக்கவிருக்கிறார்.
தொகுப்பாளர் ஶ்ரீ ரஞ்சனி, தொகுத்து வழங்கும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைவருக்கும் சிறந்த விருந்தாக அமையும். உங்கள் சமையலறையை தேடி வரும் இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் 19 மற்றும் 20ம் தேதி மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. நாவில் நீர் ஊறும் ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.