சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு: இந்த வார நிகழ்வில் சிந்தனையை தூண்டும் உரையாடலில் குருதேவ் உடன் ஈடுபடும் ரம்யா நம்பீசன்
~ மனதை ஆக்கபூர்வமான மாற்றத்திற்கு கொண்டு செல்கிற உரையாடலை 2020 அக்டோபர் 18, ஞாயிறு காலை 11:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் கண்டு மகிழுங்கள் ~
சென்னை, 14 அக்டோபர் 2020: இந்த உலக வாழ்க்கை மற்றும் சமுதாயம் மீது சிந்தனைகளை தூண்டுகிற உள்நோக்குகள் மற்றும் கண்ணோட்டங்கள் நிறைந்த உரையாடலில் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர், பிரபல நடிகரும், பாடகருமான ரம்யா நம்பீசனுடன் இந்த நவீன உலகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடுவதை கல்ர்ஸ் தமிழில் தொடர்ந்து ஒளிபரப்பாகிவரும் சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடில் காணலாம். 2020 அக்டோபர் 18ம் தேதி இந்த ஞாயிறு அன்று காலை 11:00 மணிக்கு கல்ர்ஸ் தமிழ் அலைவரிசையில் இந்த நிகழ்ச்சியை தவறாமல் நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்கள் இதோ.
பாலின சமநிலை: தற்போதைய சமூகத்தில் நிலவிவரும் பாலின சமத்துவம் மீது குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் அவர்களின் பார்வை மற்றும் கருத்து என்ன என்ற கேள்வியை முன்வைப்பதன் மூலம் சிந்தனையைத் தூண்டும் இந்த உரையாடலை ரம்யா நம்பீசன் தொடங்குகிறார். ரம்யா நம்பீசனின் இந்த கேள்விக்கு அழுத்தமான பதிலை வழங்கும் குருதேவ், பாலினம் தொடர்புடைய பல்வேறு பிரச்சனைகள் மற்றும் அம்சங்களுக்குள் நம்மை அழைத்துச் சென்று தெளிவான விளக்கங்களை வழங்குகிறார். மகளிரின் கல்வி மற்றும் அவர்கள் திறனதிகாரம் பெறுவதற்கான அவசியம் பற்றி விரிவாகப் பேசும் குருதேவ், ரம்யா நம்பீசன் உடனான அவரது உரையாடல் பயணத்தின்போது சமூக விரோத சக்திகள் பற்றிய அவரது கருத்துக்களை மனம் திறந்து பகிர்ந்துகொள்வதை காணலாம்.
மௌனம், அமைதி நிலையின் முக்கியத்துவம்: ஒரு நபரின் வாழ்க்கையில் வெவ்வேறு கூறுகளின் முக்கியத்துவம் பற்றி ரம்யா நம்பீசனுடன் குருதேவ் நடத்துகிற உரையாடலானது, ஆர்வத்தையும் சிந்தனையையும் தூண்டுகிற பாதையில் நம்மை திருப்புகிறது. இந்த உலகில் பல்வேறு விஷயங்களை சிறப்பாக புரிந்துணர ஒரு தனிநபர் மீது அமைதி நிலை எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி குருதேவ் தெளிவான விளக்கத்தை வழங்குகிறார். மௌனமும், அமைதியும் அதிக படைப்பூக்கத் திறனுள்ளவர்களாக எப்படி ஆக்குகிறது என்று அவரது விளக்கம் ஆர்வமூட்டுகிறது.
விவாகரத்து குறித்த தவறான எண்ணம்: இந்தியாவில் விவாகரத்து குறித்து நிலவுகிற கருத்துகள், மக்களின் தவறான கண்ணோட்டங்கள் பற்றி குருதேவ்-ன் பார்வை என்ன என்பதை அறிவதற்காக ரம்யா கேள்விகளை தொடுக்கும்போது இந்த உரையாடல் இன்னும் அதிக சுவாரஸ்யமானதாக மாறுகிறது. சமுதாயத்தில் நிலவுகிற பல்வேறு வகைப்பட்ட தவறான எண்ணங்கள் மற்றும் கண்ணோட்டங்கள் பற்றி குருதேவ் வழங்கும் உறுதியான பதில் பலரது கண்களை திறக்கும் திறன்கொண்டதாக இருக்கும் என்பது நிச்சயம்.
சுவாரஸ்யமிக்க கருத்துகளும், விவாதங்களும் நிறைந்த இந்த வார எபிசோட், பார்வையாளர்களுக்கு கிளர்ச்சியூட்டும் சிந்தனைகளை வரவழைக்கும் என்பது நிச்சயம். குருதேவ் உடன் சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியை கண்டு பயனடைவதற்காக 2020 அக்டோபர் 18 ஞாயிறு காலை 11:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யவும் மற்றும் நினைவூட்டல்களை பதிவுசெய்யவும் மறந்துவிடாதீர்கள்