சென்னை விமானநிலையத்திலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் துபாய் புறப்பட்டுச் சென்றனர்.
துபாயில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் 20 ஓவர் போட்டியில் கலந்துகொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளான துபாய் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தமாதம் செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டியை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனி மற்றும் வீரர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் தங்கி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 15-ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை பயிற்சியில் ஈடுபட்டனர். நேற்று, வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்களுக்கு கொரோனா நெகடிவ் வந்தது. அதன் பின்பு இன்று (21) ஆம் தேதி தோனி தலைமையிலான சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து தனி விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றனர்.