Home / Commercial / பார்வையாளர்களின் இல்லங்களுக்கு நேர்மறை உணர்வையும் மற்றும் நல்ல மனநிலையையும் வழங்கும் கலர்ஸ் தமிழ்

பார்வையாளர்களின் இல்லங்களுக்கு நேர்மறை உணர்வையும் மற்றும் நல்ல மனநிலையையும் வழங்கும் கலர்ஸ் தமிழ்

கோவிட் – 19 பெருந்தொற்றையொட்டி உலகெங்கும் மட்டுமன்றி, தமிழ்நாட்டிலும் பெரும்பாதிப்புகளை உருவாக்கியிருக்கின்ற நடப்பு நெருக்கடி நிலையின்போது நம்பிக்கையளிக்கும் நேர்மறை உணர்வையும் மற்றும் நல்ல மனநிலையையும் வழங்கி, தனது பார்வையாளர்களை ஊக்கப்படுத்தும் ஒரு முயற்சியாக கலர்ஸ் தமிழ் அலைவரிசையானது மற்றுமொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது.  வீட்டில் இருந்துகொண்டே முருகப்பெருமான் பற்றி குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வழங்குகின்ற அற்புதமான கற்பித்தல்கள் மற்றும் விளக்கங்களைப் பெற்று கலாச்சார பாரம்பரிய பிணைப்பில் ஈடுபாட்டுடன் தனது பார்வையாளர்கள் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.  ஆடி மாதத்தில் நடைபெறுகின்ற கந்த சஷ்டி திருவிழா நிகழ்வையொட்டி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்திலிருந்தே ஒரு சிறப்பு நிகழ்வை கலர்ஸ் தமிழ் பிரத்யேகமாக ஒளிபரப்பவிருக்கிறது.  சஷ்டியின் முக்கியத்துவத்தை நேர்த்தியாக எடுத்துரைக்கும் இந்த நிகழ்வானது, பார்வையாளர்கள் மனரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வலுவோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும்.  இதைத்தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களை உணர்வுரீதியாக ஒருங்கிணைக்கின்ற, கந்தசஷ்டியை அனைவரும் ஒன்றுகூடி ஓதுகின்ற ஒரு நிகழ்வும் இடம்பெறும்.  ‘முருகன் ரகசியம்’ என்ற பெயரில் இச்சிறப்பு நிகழ்ச்சியானது, 2020 ஜுலை 26 ஞாயிறன்று மாலை 5.30 மணியிலிருந்து கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் மட்டும் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. 

கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் பிசினஸ் ஹெட் திரு. அனுப் சந்திரசேகரன் இது குறித்து பேசியபோது, “புதுமையான மற்றும் தரமான உள்ளடக்கத்தைக் கொண்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்திற்கு பொருத்தமான முறையில் கதை சொல்வது மற்றும் நிகழ்ச்சிகளை வழங்குவது மீது கலர்ஸ் தமிழ் எப்போதுமே சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது.  கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க காலத்திலும் கூட எமது பார்வையாளர்கள் தொடர்ந்து மகிழ்விக்கப்படுவதையும் மற்றும் பிணைப்பில் இருப்பதையும் உறுதி செய்வதற்காக  தொடர்ந்து சிறப்பான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளத் தொடங்கினோம்.  கந்தசஷ்டி திருவிழா  கொண்டாடப்படும் நன்னாளில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஆசிரமத்திலிருந்து ஒளிபரப்படுகின்ற இந்த நிகழ்ச்சியானது, எமது பார்வையாளர்கள் அனைவரின் உள்ளார்ந்த சமநிலை மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்தும்.  எமது பார்வையாளர்களை இன்னும் மகிழ்ச்சியிலும், திருப்தியிலும் ஆழ்த்த வேண்டும் என்ற எமது பொறுப்புணர்வானது, முக்கியமான கலாச்சார நிகழ்வுகளை நாங்கள் தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்களை பொறுப்புள்ளவர்களாக ஆக்கியிருக்கிறது.  இந்த தெய்வீக அனுபவமானது, இந்த நெருக்கடியான காலத்தை நம்பிக்கையோடு கடந்துசெல்ல உதவுவதோடு, அவர்களின் நேர்மறையான எண்ணங்களை சிறப்பாக உயர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.

முருகப்பெருமான், தமிழ் கடவுளாக, தமிழ் பேசும் மக்களால் அறியப்படுகிறார்.  உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் மனிதாபிமானம் மிக்க தலைவரும், ஆன்மீக குருவுமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், முருகப்பெருமானின் உபதேசங்கள் பற்றியும் சஷ்டியின் முக்கியத்துவம், தனிநபர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதான அதன் தாக்கங்கள் பற்றியும் சிறப்பான சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளும் இந்நிகழ்வானது, மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது.  உலகெங்கிலும் உள்ள தமிழ்பேசும் மக்களை பிரார்த்தனையில் ஒருங்கிணைத்து, மனவலிமையை வழங்கி, அவர்களை பாதுகாக்கக்கூடிய கந்தசஷ்டி கவசத்தை அனைவரும் ஒன்றுகூடி பாடுகின்ற அமர்வானது, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.  நடப்பு பொதுமுடக்க சூழலின் காரணமாக, அமலிலுள்ள கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு இந்நிகழ்வை ஒளிபரப்ப கலர்ஸ் தமிழ் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறது.  மனது, உடல் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் மேன்மைப்படுத்தக்கூடிய இந்த தெய்வீகமான தியான அனுபவத்தின் ஒரு அங்கமாக திகழ்வதற்கு இந்நிகழ்வின் ஒளிபரப்பின் வழியாக தனது பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை கலர்ஸ் தமிழ் வழங்குகிறது. 

உங்கள் இல்லத்தில் வசதியாக அமர்ந்துகொண்டே, 2020 ஜுலை 26 ஞாயிறன்று மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகின்ற முருகன் ரகசியம் என்ற இந்த ஆன்மீக நிகழ்ச்சியின் பிரத்யேக ஒளிபரப்பை தவறாது கண்டு மகிழவும், தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அருளைப் பெற்று பயனடையவும் மறவாதீர்கள்.

கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது.  சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553).

கலர்ஸ் தமிழ் குறித்து:

2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவந்திருக்கின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். பெண்களையும் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். ‘இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும்.  வேலு நாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

About Publisher

Check Also

The Diwali Edit Play Date Party by The Activity Room and Synck for tiny tots on October 20th at Synck

Chennai October 20th 2021: The Activity Room, a Chennai-based fun space for children to learn, …